ஞாயிறு, 31 ஜனவரி, 2010

கன்னத்தில் முத்தமிட்டால் ...


உதிர்ந்த இமை முடியை
அகற்றிய நொடியில்
உன் கண்களில் நான் !

முத்தத்திலும்,
‘அப்பா’ என்ற சத்தத்திலும்,
உன் மூச்சிலும், பேச்சிலும் நான் !

என் எழுத்துக்களுக்கிடயே
உன் கிறுக்கல்கள் தந்த
அர்த்தங்களில் நான் !

உன் கேள்வியில் நான் !
உனக்கு கற்பித்து, கற்றதும் நான் !

வாழ்கையில் நீ, என் குழந்தை
விளையாட்டில் நான், உன் குழந்தை

வாழ்கையே ஒரு விளையாட்டெனின்...

என்னிலிருந்தா நீ ?
உன்னிலிருந்து தானே நான்!

6 கருத்துகள்:

பின்னோக்கி சொன்னது…

வாவ்.. ஒரு அப்பாவின் உணர்வு பதியப்படுவது இது முதல் முறை என்று நினைக்கிறேன். அற்புதம். வேறேன்ன சொல்ல ?

பெயரில்லா சொன்னது…

பின்னோக்கி சொன்னதுக்கு ஒரு ஆம் போட்டுக்கறேன்

சிவப்ரியன் சொன்னது…

கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்.

தலைப்பு - படத்தின் பாதிப்பா?

சந்தனமுல்லை சொன்னது…

சிங்கம் களத்துலே இறங்கிடுச்சு டோய்! ;-)))

அமுதா சொன்னது…

/*சந்தனமுல்லை சொன்னது…
சிங்கம் களத்துலே இறங்கிடுச்சு டோய்! ;-)))*/
ரிப்பீட்டு....

ஸ்ரீராம் சொன்னது…

யதார்த்தம் சொட்டுகிறது!

கருத்துரையிடுக