சனி, 23 ஜனவரி, 2010

காதல் வ(ரி)லிகள் ...
உன்னை பார்க்குமுன் ‘நான்’
பார்த்தபின் ‘நான்’ என்று
என்னை இரண்டாக்கியவளே ...

என் பழைய ‘நானை’ உனக்கென
அழித்து புதிய ‘நான்’ ஆக்கிக்கொண்டேன்...

ஆனால் ‘நீ’ மட்டும் அதே ‘நீ’

இன்று கேலி செய்தனர் என்னை
இருக்கும் ‘நான்’ நானே இல்லை...
வெறும் ‘சூன்யம்’ என்று

நீ நீயாகவே இருந்து என்
பழைய ‘நானை’ பறித்துச்சென்றாயே...

மீண்டும் நான் பழைய நானாக..
சிறிதளவேனும் என்னைத் திருப்பித்தாடி
கல்நெஞ்சி...


4 கருத்துகள்:

பின்னோக்கி சொன்னது…

காதல் கசிந்துருகுகிறது. அவள் மாறவில்லை என்று சொல்ல தைரியம் வேண்டும் :-).

சந்தனமுல்லை சொன்னது…

ஸ்ஸ்...ப்பா!
கொலவெறி காதல்னா இதுதானா! :-))

சந்தனமுல்லை சொன்னது…

தமிழ்மணத்தில் இணைக்கலாமே!! http://www.tamilmanam.net/index.html

அகஆழ் சொன்னது…

நன்றி பின்னோக்கி...கவிதைக்கு ஏது பயம் :-)

நன்றி சந்தனமுல்லை...கொலையுண்ட காதல் என்றும் வைத்துக்கொள்ளலாமே!

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.
http://www.thamizmanam.com/user_blog_status.php

கருத்துரையிடுக