இத்தனை சிக்கல்களா மனதிற்குள்...
இரவும் பகலும் மாறி மாறி வருவது போல்
ஒவ்வொரு கணமும் முரண்பட்ட சிந்தனை...
எப்படித்தான் இயங்குகிறேனோ ?!
ஒரு நொடி கருணை, தயவு என்று தலை தூக்கும்
மறு கணமே தண்டனை சரி என்று பறை சாற்றும்
காதலுக்காக காமமா...
காமதிற்காக காதலா...
பணம் நல்லதா...கொடியதா...
பாசம் கலந்த வேஷமா...
வேஷம் கலந்த பாசமா...
மீண்டும் பிறவியா...
என்றும் மோட்ஷமா...
இல்லாமல் இருக்கின்றாரா கடவுள்...
இருந்து இல்லாமல் இருக்கின்றாரா ...
எனக்குள்ளே என்னை நானே
தேடிக்கொண்டிருக்கிறேன்...
இருப்பினும்,
இத்தனை முரண்களுடன்
என்னை,
தன் மூன்றாம் மாதத்திலேயே
கண்டுகொண்டு என் முகம்
பார்த்துச் சிரித்தாளே என் மகள்
என்ன விந்தை !
9 கருத்துகள்:
வாவ்..அகஆழ்..இதே நிலைதான் எனக்கும் கிட்டதட்ட, பப்பு என்னை கட்டிக்கொண்டு 'அம்மா நீங்க குட்'மா' என்று சொல்லும்போதெல்லாம்!
நேற்றிலிருந்துதான் உங்கள் பின்னூட்டங்கள் பார்க்கிறேன்.. நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.
அக ஆழ் - கட உள்... ::))
கவிதைக்கு மிகவும் பொருத்தமான படம். இந்த முரண்பாடுகள் ஏற்படுத்தும் ஒரு சம நிலையிலேயே வாழ்க்கைப் பயணிக்கிறது.
இந்த முரண்பாடுகள் இல்லாத மனிதன், ரொம்ப நல்லவனாக இல்லை ரொம்ப கெட்டவனாகவோ மாறிவிடும் சூழ்நிலை உள்ளது.
பெரும்பாலான சமூகம் இந்த முரண்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறது.
அருமை. குழந்தையின் பார்வையில் முரண்களற்ற மனிதன் என்றுமே.
நன்றி முல்லை!
நன்றி பலா பட்டறை! மேலும் நன்றி ஊக்குவிப்பதற்கு !
நன்றி பின்னோக்கி! முரண் இல்லா மனிதனை பற்றி தாங்கள் கூறுவது உண்மை தான்.
முல்லை பதிவின் வாயிலாகவே உங்கள் அறிமுகம்.நல்ல அறிமுகம்!நன்றி முல்லை.
எல்லா கவிதைகளும் வாசித்தேன்.நல்லாருக்குங்க.
நல்லா இருக்குங்க கவிதை.
நன்றி பா.ரா!
நன்றி சின்ன அம்மிணி!
அருமை
குழந்தைகள் எப்பொழுதும்...
கருத்துரையிடுக