ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அழைத்துச்செல் ஆண்டவனே ...


அழைத்துச்செல் ஆண்டவனே - என்னை
தூளியில் கட்டி, பாலூட்டி, சீராட்டி
குளிப்பாட்டி வளர்த்துவந்த காலத்திற்கு
அழைத்துச்செல் ஆண்டவனே...

என் மழலையில் நானே மூழ்க
என் பிஞ்சு விரல்களே என் நெஞ்சைத் தீண்ட
தட்டுத் தடுமாறி பலமுறை தடுக்கி விழுந்தும்
விடா முயற்ச்சியில் எழுந்து நடமாடிய என்னைக்
காண அழைத்துச்செல் ஆண்டவனே...

அ - அம்மா, ஆ - ஆடு, இ - இலை என்று
நான் முதன்முதலில் கற்றதும்
ஏன், எப்படி, எதற்கு என்று எதற்கெடுத்தாலும்
கேள்வி கேட்டு வந்த ஆற்வச்சிறுவனைக்
காண அழைத்துச்செல் ஆண்டவனே...

கள்ளமற்ற, சிறு களங்கமற்ற, நற்சிந்தனைகள்
மட்டுமே பெற்ற என்னைக் காண
அழைத்துச்செல் ஆண்டவனே...

அப்படி நீ என்னை அவனிடம் அழைத்துச்சென்றால்
ஒன்றே ஒன்று மட்டும் கேட்பேன்...
இத்தனையும் கற்று வந்த நீ, ஏன்
வாழ்க்கையின் தத்துவம்
இயற்க்கையின் நியதி
காலத்தின் லீலைகள்
பிறப்பின் சூட்சுமம்
இறப்பின் இயல்பு
இவற்றை மட்டும் கற்கவில்லை

முடிந்தால் அவற்றை கற்கச்சொல்லிவிட்டு
மீண்டும் இந்த நிலைக்கு வருவேன்.

அப்போது இந்தப் பக்கம் வெறும்
வெற்றுப்பக்கமாக இருந்திருக்கும்...

4 கருத்துகள்:

அமுதா சொன்னது…

அருமையான வரிகள். எழுத்துக்களின் மெருகு கூடிஉள்ளது. வாழ்த்துக்கள்.

/*அப்போது இந்தப் பக்கம் வெறும்

வெற்றுப்பக்கமாக இருந்திருக்கும்...
*/
இரசித்தேன்

பின்னோக்கி சொன்னது…

தலைப்பை பார்த்து சற்றே பயந்து போனேன். சிறுவயதிலேயே நிறைய கற்றுவிட்டால் பிஞ்சில் பழுத்த பழம் போல ஆகிவிடாதா ?. அனுபவத்திற்கு ஒரு வயது இருக்கிறதே. இக்கவிதை, இயலாமையை நினைத்து வருந்தும் ஒருவனின் மன ஓட்டங்கள் என்ற அளவில் அருமையாக இருக்கிறது.

சந்தனமுல்லை சொன்னது…

எனக்கு கடைசிவரிகள் மெத்த பிடித்தன! அழகாக எழுதுகிறீர்கள் அகஆழ்!

அகஆழ் சொன்னது…

நன்றி அமுதா,
நன்றி பின்னோக்கி, சிறு வயதிலேயெ கற்க வேண்டும் என்று இல்லை. இந்த நிலை வருவதர்குள் கற்றிருந்தால் போதுமே :-)
நன்றி முல்லை !

கருத்துரையிடுக