வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

ஏழ்மை...ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்
ஒரு அரை நிர்வாண பிச்சைக்காரி..

ஓடிச் சென்று மூடினேன்
அரை குறையாக திறந்திருந்த
ஜன்னலின் திரைச்சீலையை

என் நிர்வாணம் அங்கே
வெளிப்பட்டது.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


அவள் ஏழ்மையை...
வெண்பாவில் பாட
‘நாள், மலர், காசு, பிறப்பு’
முடிவில் வரும் என அறிந்தேன்

அவள்,
நாள் மலர்ந்ததும், காசுக்கு அலையும் பிறப்பு
இதற்கு முடிவு ?

8 கருத்துகள்:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

\\\அவள் ஏழ்மையை...
வெண்பாவில் பாட
‘நாள், மலர், காசு, பிறப்பு’
முடிவில் வரும் என அறிந்தேன்\
ம்..என்ன செய்யறது .. பாதிச்சதை எழுதறோம் ஆனா அதை எழுதும் போதும் அது நம்மை பாதிக்குது.. எதை செய்யனுமோ அதை செய்யாம இப்படி எழுதறமோன்னு .
ரொம்ப உண்மை

அமுதா சொன்னது…

/*என் நிர்வாணம் அங்கே
வெளிப்பட்டது.
*/


/*நாள் மலர்ந்ததும், காசுக்கு அலையும் பிறப்பு
இதற்கு முடிவு ?*/
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யதார்த்தம் மனதை அறைகிறது

சந்தனமுல்லை சொன்னது…

நல்லாருக்கு அகஆழ்!

/நாள் மலர்ந்ததும், காசுக்கு அலையும் பிறப்பு
இதற்கு முடிவு ?/

:-(

பின்னோக்கி சொன்னது…

இரண்டு அற்புதமான மனதை கனக்க செய்யும், மனதில் போட்டு அசை போட வைக்கும் கவிதைகள்.

வார்த்தை விளையாட்டுக்களை இரண்டாவது வாசிப்பில் உணர முடிந்தது.

முதல் வாசிப்பில், கனமே மிஞ்சியது.

ஆர்வா சொன்னது…

ரொம்ப பெயினா இருக்கு உங்க வார்த்தைகள். நமக்கு இந்த மாதிரி எல்லாம் எழுத வராது

Unknown சொன்னது…

கொண்டு போட்டிங்க வார்த்தையால

Thekkikattan|தெகா சொன்னது…

நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக முதலில் உள்ள கவிதை. keep giving ...

மீன்துள்ளியான் சொன்னது…

முதல் கவிதை அருமை ..

கருத்துரையிடுக