வெள்ளி, 15 ஜனவரி, 2010

பிச்சை
குருட்டு பிச்சைக்காரன் உண்மையில் குருடன்தானே
என்று சோதித்து பார்த்த எனது பார்வை...

செவிடு ஊமை பிச்சைக்காரனை சோதிக்க
நான் எழுப்பிய சப்தம்...

ஒரு ருபாய் தர்மம் பண்ண இத்தனை சோதனை.

தர்மம் செய்த பின்பும் சோதனை சரியாக செய்தேனா
என்று மனதில் நெருடல்...

"ஐயா, அம்மா" - என் ஈன மனது நொண்டிதான் கிடக்கிறது
"ஏதாவது தர்மம் பண்ணுங்க"னு பிச்சை 
எடுக்கவேண்டியவன் நான் இல்லயோ?

6 கருத்துகள்:

பின்னோக்கி சொன்னது…

அழகான கவிதை. உண்மையில் நடப்பது தான் இது. ஆனால் ஏமாற்றுபவர்களும் இருப்பதால் தான் இந்த மாதிரி நடக்கிறது.

அண்ணாமலையான் சொன்னது…

ஆமாம் உண்மைதான்

அகஆழ் சொன்னது…

நன்றி பின்னோக்கி, அண்ணாமலையான்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

பிச்சை போடறதுக்கு முன்னயும் யோசனை ..பின்னாடியும் நெருடல் சில நேரம் பிச்சை போடலன்னா ஒரு காரணம் சொல்லிக்கிறதும் போட்டதுக்கப்பறம் ஏன் போட்டேன்னு சமாதானம் சொல்றதும்ன்னு ..எப்பவுமே நெருடலாத்தான் இருக்கும்.ரொம்ப உண்மை..

அமுதா சொன்னது…

ஒரு ரூபாய் பிச்சைக்கு ஓராயிரம் யோசனைகள் ... உணமை தான்

அகஆழ் சொன்னது…

நன்றி முத்துலெட்சுமி...
நன்றி அமுதா ...

கருத்துரையிடுக