வெள்ளி, 29 ஜனவரி, 2010

சொல்லாத காதல் ...


தோற்றுவிடுவோமோ
என்ற அச்சத்தில்
காதலை தெரிவிக்காமலே
தோற்றுவிடுவோமோ ?!
-*-*-*-

நான் வரும் பக்கம்
புத்தகத்தால் முகத்தை மறைத்தாயே
சூரியனுக்காகத்தானே !
-*-*-*-

என்னை ஊமை ஆக்கிவிட்டு
என்னிடமே கேள்வி கேட்கிறாயே
என்ன விளையாட்டடீ இது..
-*-*-*-

பார்த்துவிட்டால் உன் விழி
தின்கிறது
பார்க்காவிட்டால், பார்க்கவில்லயே
என்ற கவலை
தின்கிறது
எப்படியும் நான் தின்னப்படுவது
உறுதி என்றால், அதை
உன் விழியே செய்யட்டுமே !

6 கருத்துகள்:

பின்னோக்கி சொன்னது…

காதல் ரசம் சொட்டுகிறது ஒவ்வொரு கவிதையிலும். அருமை. பிப்ரவரி 14க்கு தயாராகிறீர்களா ?

சந்தனமுல்லை சொன்னது…

அவ்வ்வ்..வொய் திஸ் கொலவெறி...:-)))
கடைசி கவிதை பிடித்திருந்தது!

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்குங்க.

அகஆழ் சொன்னது…

நன்றி பின்னோக்கி,

நன்றி முல்லை - இன்னொரு கொலவெறியா? இதுவும் கொலையுண்ட ...

நன்றி ‘பா.ரா’. இதுவரை தங்களை ‘பா ரா மல்’ இருந்து விட்டேனே. தங்களது ஒவ்வொரு கவிதையும் நெஞ்சை புழிகிற்து. இப்படியும் எதார்தமும், அழுத்தமும் கலந்து எழுத முடியுமா என்று பிரமிப்பூட்டுகிறது.

அமுதா சொன்னது…

கலக்கறீங்க அக ஆழ்

உமா சொன்னது…

ஜோரா எழுதற டா

கருத்துரையிடுக