புதன், 10 மார்ச், 2010

ஆயிரம் காரணங்கள் ...



அது
உண்மை சாமியாரின்
போலி முகமா...
அல்லது
போலிச் சாமியாரின்
உண்மை முகமா..

எனக்கு புதிர்னா ரொம்ப
பிடிக்கும்.
யார்ரா அவ
‘R' ரா அவ.
அந்த ‘ர’ வா
இப்படி ராவோடு ராவாக

ஒருவரின்
முகம் மறைக்கப்பட்டு...
ஒருவரின்
முகம் கிழிக்கப்பட்டு...

சிலருக்கு வெறும் செய்தி
சிலருக்கு அது அநீதி
சிலருக்கு பெரும் இடி
சிலருக்கு அது வாணிபம்
சிலருக்கு ஏமாற்றம்
சிலருக்கு மகிழ்ச்சி ...

சிலருக்கு சமூகம்
பாதிக்கப்பட்டுவிடுமோ
என்ற கவலை

பேரின்பமே சிற்றின்பத்திலா
என்ற அதிர்ச்சி சிலருக்கு
 
சிலர் 
கற்பனையிலும் நினைக்கவில்லை
விற்பனைக்கு அவள் என்று

அவரவர் கோணத்தில்
அவரவர் வாதங்கள்

அவரவருக்கான தாக்கங்கள்

எல்லாருக்குமான உணர்வுகள்
சரிதானா?

அந்த பலான வீடியோவை
முழுவதுமாக பார்க்க
இதற்கு மேலும் 
காரணம் தேவையில்லை

நான் ’போலி’ மனிதன்  அல்லவே...

5 கருத்துகள்:

சந்தனமுல்லை சொன்னது…

வாங்க..வாங்க..ஜோதியிலே ஐக்கியமாகிட்டீங்களா! :-)

பின்னோக்கி சொன்னது…

கடைசி வரி மிகவும் பிடித்திருந்தது.

ஸ்ரீராம் சொன்னது…

அருமையான கவிதை! என் நண்பர் பல வருடங்களுக்கு முன் விகடனில் எழுதிய ஒரு ஹைக்கூ கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

போலி சாமியார்
பூஜை செய்கிறார்...
பிளாஸ்டிக் பூக்களால்!

Hema சொன்னது…

மிக அருமை!!!

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான கவிதைவரிகள் வார்த்தைகள் தெளிந்த
நீரோடைபோல் கருத்துக்களைக் காவிச் செல்லும்விதம் பாராட்டப்பட வேண்டிய
விசயம்...வாழ்த்துக்கள் சகோ உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் வளம்பெற.நன்றி பகிர்வுக்கு .....

கருத்துரையிடுக