நான் சைவமாக மாறியதற்கு
நன்றி நவின்றது...
வான் கோழி
அகத்தின் ஆழம் ஆழ் கடலை மிஞ்சும்... அந்த ஆழத்திலிருந்து ...
பூ
எடுத்துச் சென்றான்
பக்தன்...
பூ
இருக்கும் இடத்திலேயே
கடவுள் இருப்பதை அறிந்த
ஞானி...
சும்மா இருந்தான்
மார்ச் மாதம்...
போக்குவரத்து நெரிசல்,
மார்ச்சுவரி செல்லும்
அமரர் ஊர்தி...
சர வெடிப் பட்டாசு,
சத்தம் அடங்கியதும்
புகையுடன் ஒரு வாசம்,
ஏனோ எனக்கு மட்டும்
அது மகிழ்ச்சியாய்
தீபாவளியை
நினைவு படுத்தியதில்
ஒரு கணம் இன்பம்...
மறு கணம் நெருடல்...
"சரி சரி
அந்த ஆன்மா சாந்தி அடையட்டும்", என்று
அவசரமாய் நினைத்து விட்டு
நகர்ந்தேன்.